சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், வெளியிட்ட பின்னரே அவரது உடல் நலம் குறித்த விரிவான தகவல் தெரிய வரும். ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவரது […]
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டள்ளார். இந்நிலையில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வென்டிலேட்டர் ஆதரவில் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் […]