பிளஸ் 1 மதிப்பெண் சான்று – செப்.30 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!

Students who have passed the Class 11 general examination can download the mark certificates from the 30th.

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 30ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழகத்தில் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 30 முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பம் கட்டாயம் என்றும் கூறியுள்ளது.

மேலும், 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரியவர்கள் அக்.1-ஆம் தேதி முதல் 5 வரைwww.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.