தமிழகத்திற்கு வந்த வடமாநிலத்தவர்கள் சிலர் ஒன்றிய அரசு நிறுவனங்களில் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. தமிழக தேர்வுத் துறையின் சான்றிதழ் சரிபார்ப்பில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. 200க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் இவ்வாறு போலி சான்றிதழ் கொடுத்து அஞ்சல் ஊழியர், இந்தியன் ஆயில் நிறுவனம், சிஆர்பிஎஃப் ஆகிய பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிஜிலாக்கர் உள்ள டிகிரி,மதிப்பெண் சான்றிதழ் செல்லும் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம்,2000 இன் விதிகளின்படி,டிஜிலாக்கர் உள்ள டிகிரி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் செல்லும் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது. இதன்காரணமாக,டிஜிலாக்கர் கணக்கில் வழங்கப்பட்ட பட்டம்(டிகிரி), மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களை அசல் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம்,கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. UGC requests all Academic Institutions […]
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 30ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழகத்தில் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 30 முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பம் கட்டாயம் என்றும் கூறியுள்ளது. மேலும், 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரியவர்கள் அக்.1-ஆம் தேதி முதல் 5 […]