அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரையில், அவர்கள் நியமிக்கப்பட்ட பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன்பின், அவர் மற்ற இடத்திற்கு பணிமாற்றம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறை தான் தொடர்ந்து காணப்படுகிது. இந்த நிலையில், வட மாவட்டங்களை பொறுத்தவரையில், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன. இதனையடுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களை இங்கு பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க […]
DPI வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு. பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில், சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் திருவுருவச்சிலை நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கற்றல் கற்பித்தல், தலைமைத்துவம், ஆச்ரிரியர் திறன் மேம்பாடு ஆகிய பன்முக வளர்ச்சியினை […]
கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைக்க வேண்டும் என்றும், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 7,500 ரூபாயிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் பணிநியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி,அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.12,000 தொகுப்பூதிய […]
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் CEO பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT),கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு, பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வாய்ப்புகளை வழங்கி, கல்வி தொலைக்காட்சியை நடத்தி வருகிறது. கொரோனா தொற்றுநோய்களின் போது இலட்சக்கணக்கான குழந்தைகளை லீமிங்கில் ஆதரிப்பதற்காக ஒற்றை புள்ளி ஊடகமாக […]
மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல். தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதால் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு என தகவல் கூறப்படுகிறது. மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது என்றும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும் புதிய […]
2020-21-ஆம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில், சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த பள்ளிகள் என்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும், தலா 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப அக்குழுவிற்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை. பள்ளிகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி என்று தொடர் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகாரையடுத்து, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது எனவும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 4 நாட்கள் விடுமுறையின்போது, பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த […]
இ-சேவை மையங்களில் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்டவை பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 23 வகையான பள்ளி சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இதனால் இனி மாணவர்கள், பொதுமக்கள் இனி இ-சேவை மையங்கள் […]
ஒமைக்ரான் தொற்றானது பரவாமல் தடுக்க,பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. உலகின் சில நாடுகளில் ஒமைக்ரான் பரவிய நிலையில், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்,1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை […]
சென்னை:டிபிஐ அலுவலகத்தில் இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை (டிபிஐ) அலுவலகத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி இடைநிற்றல்,பொதுத்தேர்வு, பாலியல் புகார்களை தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 30ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழகத்தில் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 30 முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பம் கட்டாயம் என்றும் கூறியுள்ளது. மேலும், 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரியவர்கள் அக்.1-ஆம் தேதி முதல் 5 […]
ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை. புதிய பைக், கார் வாங்கவும் திருமணம் செய்யவும் அரசின் கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க […]
ஒரு மாணவர் கூட இல்லாமல் இயங்கும் 46 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் 46 அரசு பள்ளிகள் பள்ளிகள் மூடப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர் எண்ணிக்கை இல்லாமல் இருக்கும் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார். 46 அரசு பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக செயல்படும் என்றும் மாணவர்கள் குறிப்பிட்ட […]
தமிழ் மொழி குறித்து தவறான தகவல் இருக்கு பாடம் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு முதல் 12 ம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலம் மொழி பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மை என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம் பெற்று இருந்தது. அந்த பாடத்தில் தமிழ் மொழி 2300 ஆண்டுகள் தான் பழமையானது என்றும் தமிழை விட சமஸ்கிருதம் தான் தொன்மையான […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை நடப்பு ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியது .அந்த பாடப்புத்தகத்தில் ஆங்கில புத்தகத்தில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது.இதில் உலகின் பழங்கால மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகள் முன்பு உருவானதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதேபோல், மற்ற தொன்மை மொழிகளான சீன மொழி கி.மு 1250 ஆண்டிலும், கிரேக்கம் கி.மு 1500 ஆண்டிலும், சம்ஸ்கிருத மொழி கி.மு 2000 ஆண்டு முன்பு […]
12 ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் மொழி 300 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12 ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதில். ஆங்கில புத்தகத்தில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில் பாடம் ஓன்று உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழக தமிழ் பேராசியரான ஜார்ஜ் எல்.ஹார்ட் எழுதியுள்ளார். இதில், தொன்மையான மொழிகள் உருவான […]
தமிழகத்தில் உள்ள 5,588 பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கவும் மற்றும் பயன்படுத்திய நாப்கினை எரிப்பதற்காக நாப்கின் மறுசுழற்சி இயந்திரம் வைக்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சத்யநாராயணன் மற்றும் புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் வழங்கப்படுவதாகவும் மேலும் 3,200 பள்ளிகளில் நாப்கின் எரிக்க இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும்,மீதமுள்ள பள்ளிகளில் விரைவில் இயந்திரம் வைக்கப்படும் […]