சசிகலாவுக்கு வழங்கிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.!

A petition has been filed in the High Court against Sasikala for using the AIADMK flag.

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என சசிகலாவிடம் நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நோட்டீஸ் வழங்கிய கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி கோரிய அறிவழகன் என்பவரிடம் நோட்டீஸ் கொடுக்காமல் சசிகலாவிடம் நோட்டீஸ் வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.