பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113-ஆவது பிறந்த நாளை முன்னியிட்டு அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113-ஆவது பிறந்த நாளான வரும் 15 புதன் கிழமை காலை 10.00 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கழக நிர்வாகிகள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துதல். pic.twitter.com/nFVRRgINjM
— AIADMK (@AIADMKOfficial) September 12, 2021