முதல்வர் ஸ்டாலினுக்காக நாக்கை வெட்டி காணிக்கையாக படைத்த பரமக்குடி வனிதா!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக வெற்றி பெற்றதால் தனது நாக்கை வெட்டி காணிக்கையாகப் படைத்த பரமக்குடி வனிதா.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சி செய்த நிலையில், திமுக 10 ஆண்டுகளும் எதிர்க்கட்சியாக இருந்து வந்த நிலையில், திமுக தொண்டர்கள் அனைவருமே திமுக இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என பல வழிகளில் வேண்டுதல் நடத்தியும் பிரச்சாரங்களையும் செய்து வந்தனர். இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த கார்த்தி என்பவர் தீவிரமான திமுக தொண்டன். இவரது மனைவி வனிதாவும் திமுக இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வந்தால் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக படைப்பதாக பரமக்குடியில் உள்ள கோவிலில் வேண்டி கொண்டுள்ளார் வனிதா.
அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது வெற்றி பெற்றுள்ள நிலையில், தான் சொன்னபடியே தன்னுடைய நாக்கை அறுத்து வனிதா காணிக்கையாக செலுத்தி தனது நேர்த்தியை நிறைவேற்றியுள்ளார். நாக்கை அறுத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வனிதாவை உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்பொழுது வனிதாவுக்கு தீவிரமாக மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருவகிறதாம். தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ள பெண்மணியின் செயல் தற்பொழுது தமிழகம் முழுவதிலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025