சென்னை :தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியான SIR-ஐ (Special Intensive Revision) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (நவம்பர் 11) விசாரணைக்கு வர உள்ளது. SIR மூலம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாகக் கூறி திமுக கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
சென்னை தங்கசாலை பகுதியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலும், சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டங்களில் SIR-ஐ உடனடியாக கைவிடக்கோரியும், வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சி என்று கண்டித்தும் பதாகைகள் ஏந்தப்பட்டன. “SIR வேண்டாம்”, “வாக்குரிமை பறிக்காதே” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. திமுக கூட்டணி கட்சிகள் SIR மூலம் போலி வாக்காளர்களை நீக்குவதாகக் கூறப்படும் நடவடிக்கை உண்மையில் மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகக் குற்றம் சாட்டின.
இந்த ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்று பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளன. உச்ச நீதிமன்ற விசாரணை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் SIR பணியை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி இதை வாக்குரிமைப் போராட்டமாக முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் – களப் போராட்டம் – மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline –
களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் – கண்டன முழக்கங்களை எழுப்பியும் #SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்! தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்” என கூறியுள்ளார்.
unknown node