ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புக.. தமிழக அரசு புதிய உத்தரவு.!

தமிழக அரசின் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையேயான விகிதம் மிக குறைவாக காணப்பட்டு வந்தது. இதனால் ஆசிரியர்களுக்கு அதிகமான பணி

Featured image

தமிழக அரசின் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையேயான விகிதம் மிக குறைவாக காணப்பட்டு வந்தது. இதனால் ஆசிரியர்களுக்கு அதிகமான பணி சுமைகள் ஏற்படுகிறது என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்க பட்ட நிலையில் அதற்காக தமிழக அரசு அந்த கோரிக்கையை இன்று கையில் எடுத்து உள்ளது.

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் – தமிழ்நாடு அரசு

தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB ) வாயிலாக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்படுவது வழக்கமாக கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று அனைத்து பாடப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் முதற்கட்டமாக 2800 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ( 27-01-2024 ) தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. விண்ணப்பங்கள் பிப்ரவரி 2024 இல் தொடங்கி, இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வானது ஏப்ரல் 2024 இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரபூர்வ தேர்வு தேதி விரைவில் வெளியாக உள்ளது.

வருகிற 31-05-2024 க்குள் சான்றிதழ் சரிப்பார்ப்பு போன்ற அனைத்து செயல் முறைகளையும் நிறைவேற்றி முதற்கட்டமாக  2800 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.