#OrangeAlert: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு "ஆரஞ்சு அலார்ட்" – இந்திய வானிலை மையம்!

The Indian Meteorological Department has issued an orange alert for the next three days in Tamil Nadu.

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்வதால் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1 வரை கனமழை நீட்டிக்கும் எனவும் கூறியுள்ளது.

சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.