எதிர்க்கட்சிகளுக்கு மக்களை பற்றிய கவலை இல்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

எங்களுடைய ஆட்சியை குறைசொல்லும் எதிர்க்கட்சிகளின் சிந்தனைகளில் தான் குறைபாடு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin dmk

விழுப்புரம் : மாவட்டம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைக்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு வருகை தந்திருந்தார்.

விழாவிற்கு வருகை தந்த அவர் மணிமண்டபத்தை திறந்து வைத்துவிட்டு பேசுகையில் ” பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்தான் ‘திமுக’. இந்த திமுக அரசு தான் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 2 லட்சம் பேர் மீதான வழக்குகளை  திரும்பப் பெற்றது.

யாரும் யாருக்கும் அடிமை இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட கருத்தியல். திராவிடம் இங்கு இருப்பதால்தான் நாட்டின் பிற்பகுதியில் நடப்பது மாதிரி ஆதிக்க சக்தி கும்பல்கள் இங்கு தலைதூக்க முடியவில்லை. அதனால்-தான் போலிகள், துரோகிகளின் துணைக் கொண்டு எதிரிகள் நம்மீது பலமுனை தாக்குதல் நடத்தி நடத்தி சோர்ந்துப் போறாங்க.

21 சமூக நீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ளேன். நிதி இல்லை நிதி இல்லை என புலம்பாமல் மக்கள் குறைகளை நீக்கும் அரசாக உள்ளது. என்னுடைய எண்ணம் நம்பர் 1 முதலமைச்சர் என்பதற்காக அல்ல, தமிழ்நாடு நம்பர் 1ஆக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியாவே திரும்பி பார்க்கிற திட்டங்களை இங்கு செயல்படுத்தி வருகிறோம்” எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” எதிர்க்கட்சி தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியோட குறை இல்லை அவர்களுடைய சிந்தனையில் ஏற்பட்டிருக்கும் குறைபாடு. அவர்களும் நல்லது செய்யமாட்டார்கள்..நல்லது செய்பவர்களையும் விடமாட்டார்கள். மக்களுக்கு நல்லது செய்தால் அவர்களுக்கு பிடிக்காது. எனவே, அதனைபற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் நம்மளுடைய கடமையை செய்யவேண்டும்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்