ஓமைக்ரான் வைரஸ் பரவல் : மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

The Chief Secretary will hold a consultative meeting today with all the District Collectors on the spread of the Omicron virus through the Divine Video.

ஓமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொலி மூலம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.

தென் ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்களால் பி.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸுக்கு, ஓமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி உள்ளது.

எனவே தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு இது தொடர்பாக தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் இன்று மதியம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.