சென்னையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.!
சென்னை: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி வரும் வேளையில், சில தினங்களாக வெடிகுண்டு மிரட்டல், கொலை மிரட்டல் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. நேற்று டெல்லி உள்துறை அமைச்சக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்ததை அடுத்து, அதிகாரிகள் சோதனை செய்ததில் அந்த மிரட்டல் போலி என தெரியவந்தது.
அதனை அடுத்து, இன்று காலை சென்னை, புரைசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமையை (N.I.A) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஹிந்தி மொழியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்தும், இந்த மிரட்டல் தொடர்பாகவும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சென்னை சைபர் கிரைம் காவல்துறை.