அடுத்த முறை ஈசல் வறுவல் வேண்டும்.. கிராமத்து சமையல் யூடியூப் சேனல் குழுவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!
கிராமத்து சமையல் எனும் பிரபலமான யூ டியூப் சேனல் குழுவினரை நேரில் சந்தித்து அவர்களுடன் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு, தமிழில் நல்லாருக்கு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்தியுள்ளார்.
யூ டியூப் சேனல்களில் தற்பொழுது கிராமத்தினர், வீட்டிலுள்ள பெண்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களது திறமைகளை காண்பித்து வீடியோக்கள் போட்டு அதில் வெற்றி காணும் பொழுது வருகின்ற வருமானத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது போல மிக மிக எளிமையாக, இணைய வசதியே குறைவான புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சின்ன மங்களம் எனும் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியன் என்பவற்றின் முயற்சியால் துவங்கப்பட்டு, மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்ஸ் உடன் வளர்ந்து நிற்க கூடிய யூ டியூப் சேனல் தான் வில்லேஜ் குக்கிங் எனும் சேனல்.
படிப்பறிவு குறைவான சின்ன மங்களம் கிராமத்தில் மிக சிரமத்துடன் M.Phil வரை பட்டப்படிப்பு பயின்றவர் தான் சுப்பிரமணியன். கிராமத்திலிருந்து உயர்ந்தவர் என்பதால் அவரது படிப்புகள் நிராகரிக்கப்பட்டு, முறையான தொழில் இன்றி தவித்து வந்த சுப்ரமணியத்திற்கு தோன்றிய அட்டகாசமான ஐடியா தான் இந்த யூ டியூப் சேனல். அதன் பின் தனது சொந்த கிராமத்தினர் மற்றும் தாத்தா, சகோதரன் ஆகியோரின் உதவியுடன் 2018 ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குக்கிங் சேனல் 8 மாதங்களுக்கு பின்பு தான் வளர்ச்சியை கண்டது. அதுவரை அயராது உழைத்துக்கொண்டே தான் இருந்தார்கள். இணையவசதி குறைவு என்பதால் ஒரு வீடியோவை அப்லோட் பண்ணவே 3 முதல் 4 மணி நேரங்கள் ஆகும், அன்று அல்ல இன்றும் அப்படி தானாம்.
இந்நிலையில் படிப்படியாக உயர்ந்த இவர்களின் சேனலில் தற்பொழுது 7.16 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள். அடிக்கடி சமையல் செய்து அருகிலுள்ள அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கும் இவர்களின் வீடியோவை பார்த்து ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நேரடியாக சின்னமங்களம் கிராமத்துக்கே சென்றுள்ளார். அங்கு காளான் பிரியாணியுடன், வெங்காய சாம்பல் தானாகவே தாத்தா சொல்வது போல தமிழில் சொல்லி சொல்லி செய்து அந்த குழுவினருடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, ரொம்ப நல்லாருக்கு என தமிழில் கூறியுள்ளார். நம்ம பார்க்க ராகுல் காந்தி வந்துள்ளார்களா எனும் ஆச்சரியத்தில் இருந்து குழுவினர் மீளவே இல்லை, அளவில்லா சந்தோசத்துடன் அன்புடன் பரிமாறிய உணவுகளை உண்ட ராகுல் காந்தி அடுத்த முறை தான் வரும் பொழுது ஈசல் வறுவல் வேண்டும் என கேட்டு சென்றுள்ளார். கிராமத்தினரின் வீடியோக்களில் ஈர்க்கப்பட்டு நேரடியாக அவ்விடத்திற்கே சென்று வாழ்த்திய ராகுல் காந்தியின் வீடியோ யூ டியூபில் தற்பொழுது நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. இதோ அந்த வீடியோ,