சாலை விபத்தில் உயிரிழந்த மாவட்ட நிர்வாகிகள்.. உடலை பார்த்து கதறி கதறி அழுத என்.ஆனந்த்.!

தவெக மாநாட்டுக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்த நிர்வாகிகளின் உடலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

Trichy N Anand cried

திருச்சி : நேற்று விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட அதிகளவு கூட்டம் கூடியதால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்கியது. இந்த மாநாட்டில் 13 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என தகவல் வெளியானது.

திருச்சியில் இருந்து த.வெ.க மாநாட்டுக்கு சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதிய விபத்தில் இந்த விபத்தில் சீனிவாசன், தவெக நிர்வாகி கலைக்கோவன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு நேற்று தவெக மாநாட்டு புறப்பட்டவர்கள், கலந்து கொண்டவர்களில் 4 பேர் உயிரிழந்த சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்யின் உத்தரவின் பேரில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சித் தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி  அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

அஞ்சலி செலுத்திய பின், அக்கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், “தவெக தலைவர் விஜய் சொன்னதால்தான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினேன். நிர்வாகிகள் இறப்பு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பங்களை கட்சி பார்த்துக்கொள்ளும்” என்று உறுதி அளித்துள்ளார்.

உறவினர்கள் வேதனை

சாலை விபத்தில் உயிரிழந்த தவெக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசனும் கலையும் ரசிகர் மன்றத்திற்காக நிறைய உழைத்து இருக்கிறார்கள், செலவு செய்திருக்கிறார்கள். இழப்பீடு கேக்கல.. நேர்ல வரணும்னு சொல்லல.. ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்? கட்சி தொண்டனின் இறப்புக்கு விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன்? ஒரு அறிக்கைகூட வெளியிடாதது ஏன்? என உயிரிழந்த தவெக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன் மற்றும் கலையின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
22.11.2024 Power Cut Details
tulsi (1) (1) (1)
Goutam Adani
dhanush aishwarya
devdutt padikkal kl rahul