யூடூப் சேனலை தொடங்கிய அமைச்சர் ஜெயக்குமார்….!!
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கென தனியாக ஒரு யூடூப் சேனலை தொடங்கி இருக்கின்றார்.இதில் அவருக்கான வீடியோ பதிவு மற்றும் அவரின் அன்றாட அரசியல் நடவடிக்கைகளை பதிவிட்டு வருகின்றார் .இந்நிலையில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
இன்று சென்னையில் இது குறித்து அவர் தெரிவிக்கையில் , செலவில்லாமல் சேனல் தொடங்க வேண்டுமென்று தொடங்கப்பட்டதுதான் அந்த சேனல் . 1000 ரூபாய் கட்டி ஓபன் செய்து கொள்ளலாம் எனவே நீங்களும் புதிய சேனலை ஓபன் பண்ணிக்கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.