தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கும், எனக்கும் மோதலா ...!பரபரப்பு தகவலை வெளியிட்ட தினகரன்

18 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவித்தால் மேல்முறையீட்டை வாபஸ் பெறுவோம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி

18 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவித்தால் மேல்முறையீட்டை வாபஸ் பெறுவோம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.

அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.

unknown node

ஆனால் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று  கருத்து தெரிவித்தார்.

நேற்று (செப்டம்பர் 26 ஆம் தேதி)  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.ஆலோசனைக்கு பின்னர்  18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

unknown node

இந்நிலையில் மதுரையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கும், தமக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது.எப்போதும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.18 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவித்தால் மேல்முறையீட்டை வாபஸ் பெறுவோம் என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.