பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான பட்டபடிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு.
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பகளுக்கான தரவரிசை பட்டியலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் வைத்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,276 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 13,832 இடங்களுக்கும் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. Nursing, B.Pharm., உள்ளிட்ட Para Medical படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலைhttp://tnhealth.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும்,www.tnmedicalselection.orgஎன்ற இணையதளத்திலும் தரவரிசை பட்டியலை காணலாம். 2021-2022-ஆம் ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு 16,118 இடங்களில் சேர 64,900 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.