சென்னை :தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் 50-வது திருமண நாளை முன்னிட்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெற்றோருக்கு நெகிழ்ச்சியான பொன்விழா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த செய்தியில், ” அம்மாவும் – அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் -சுகதுக்கங்களை இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள். மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம் – இடைவெளியில்லா சுற்றுப் பயணங்கள் – கடும் அரசியல் சூழல்கள் – தொடர் மக்கள் பணி என அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா
அம்மாவும், அப்பாவும் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள், சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். தொடர் மக்கள் பணியில் அப்பாவுக்கு பெருந்துணையாக இருக்கிறார் அம்மா. அம்மா – அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் – முத்தங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node