மாண்டஸ் புயல் எதிரொலி – 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!
மாண்டஸ் புயல் எதிரொலியால் 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல், சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.