நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Amma District Collector SB Amrit has ordered a local holiday for the Nilgiris tomorrow.

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு.

படுகர் சமுதாய மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கோயில் படுகர் சமுதாய மக்களின் குல தெய்வமாக கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கோல் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நாளை ஹெத்தையம்மன் உலா நடைபெறவுள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் ஜன.8ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.