தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 2,78 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் வருவாய்துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நவம்பர் 14ஆம் தேதி பரிசளிக்கப்பட்டு, முறையான நேர்காணல் நடத்தில்டிசம்பர் 19ஆம் தேதி பணிநியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழகத்தில் நேற்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதில், ஜன.14 முதல் 18 வரை […]
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு. படுகர் சமுதாய மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கோயில் படுகர் சமுதாய மக்களின் குல தெய்வமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கோல் நாட்டுதல் விழாவுடன் […]
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி. தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய பகுதிகளில் 8 மாதங்களுக்கு பின் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குற்றாலம் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி […]
ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிசம்பர் 20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிச.20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்த அறிவிப்பில், அருள்மிகு மங்களநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 20-ஆம் தேதி அன்று திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாகும். அதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8-ம் தேதி […]
கொரோனா கட்டுப்பாடுகளால் திருவண்ணாமலை கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை. திருவண்ணாமலையில் வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருவண்ணாமலையில் வரும் 18, 19ம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா தடுப்பு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 27 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்ட நிலையில் 22 ஆட்சியர்கள் நேரில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இரண்டு புதிய ஆட்சியர் உட்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ள 22 ஆட்சியர்கள் […]
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ. கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த முருகன் மற்றும் கலியபெருமாள், வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஜெயஸ்ரீயின் கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி ஜெயஸ்ரீ கொடுத்த வாக்கு-மூலம் மூலம் போலீஸார் […]
விழுப்புரத்தில் சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஜெயஸ்ரீயை கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் […]
மேட்டூர் ஆணை தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை. மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் 8 ஆண்டுகளாக குறுவை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பின்னர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பருவத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.19 அடியாக உள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் […]
பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதும் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2323 ஆக உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் மட்டும் 132 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், […]
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இந்த நீள்கழச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிறுவுனர், ஆசிரியர், மாணவர்கள் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் ஆதிதிராவிட காலனியில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி இருந்த 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளில் விழுந்து உள்ளது. கனமழை பெய்து கொண்டு இருந்ததால் அருகில் இருந்தவர்களுக்கு எந்தவித சத்தமும் கேட்கவில்லை. இதை தொடர்ந்து அக்கபக்கத்தினருக்கு காலை 5 மணி அளவில் தான் விபத்து நடந்தது தெரியவர பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் […]
தற்போது உள்ள பெற்றோர்கள் அனைவரும் தனது குழந்தைகளை ஒரு சிறந்த தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தற்போது உள்ள பெற்றோர்கள் மனதில் பதிந்துள்ளது. தங்களது குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் பெற்றோர்கள் மனதில் இருப்பதால் தான் தனியார் பள்ளிகள் அதிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்ட ஆட்சியர் தனது மகளை அரசுப் பள்ளியில் […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப் பெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு டூவிபுரம் 7-வது தெருவை சார்ந்த வக்கீல் தொண்டன் சுப்பிரமணி வந்து உள்ளார்.இந்த கூட்டத்திற்கு போலீசார் உடையில் வந்தார். அப்போது தனது கார் டிரைவரை மறித்து லஞ்சம் வாங்குவது போல நூதன முறையில் போராட்டம் செய்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொண்டன் […]
நெல்லை மாவட்ட ஆட்சியர் தனது பெண் குழந்தையை அங்கன்வாடி பள்ளியில் சேர்த்திருப்பது, அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஸ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இவர், பாளையங்கோட்டையில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில், தனது இரண்டரை வயது மகளான கீதாஞ்சலியை சேர்த்துள்ளார். பொதுவாக வசதி படைத்தவர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வரும் சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரின் குழந்தை […]
விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – நெல்லை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு என்றால் கூட்டமாக திரள கூடாது. ஊர்வலங்கள் போராட்டங்கள் நடத்த கூடாது எனவே ரதயாத்திரையும் வர முடியாது வர கூடாது. ரதயாத்திரை மீறி வந்தால் ஜனநாயக முறையில் அனுமதி பெற்று போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களை அடித்து கொன்ற காவல்துறையின் லத்தியும் துப்பாக்கியும் நாட்டின் பல கலவரங்களை நிகழத்திய விஷ்வ […]
சமாதான முயற்சி என்பதை கடந்து இதுநாள் வரை ஒரு வரி கூட நாம் பதிவிட வில்லை.தேவை கருதி முதல் முறையாக பதிவிடுகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக முன்னிறுத்தப்பட்டுள்ள சந்தையூர் பிரச்சினையில் சுமூக தீர்வுக்கு எடுத்துக்கொண்ட உளப்பூர்வமான முயற்சிகள் இன்னமும் தொடர்கிறது. எத்தனை நாட்கள் எத்தனை மணி நேரம் நேரடியாக, தொலைபேசி வழியாக செலவு செய்தது எல்லாம் விரயமாகிவிடாது. உண்மை அறியும் குழுக்கள் நிறையவே வந்து கொண்டிக்கிறது.அவரவர் அறிந்த உண்மைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மாநில எல்லையும் கடந்து […]
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் கணேஷ் அறிவிப்பு செய்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை முன்னிட்டு வரும் மார்ச் 12ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சி பணியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் பங்கேற்று உள்ளனர். இன்று ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுகிறது