வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு – கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு
வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் அறிவுறுத்தி இருந்தது. தற்போது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மண்டல பதிவாளர்களுக்கு, கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஏற்கெனவே வங்கிக் கணக்கு எண் வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்து உத்தரவிடப்படுகிறது.
14,86,582 குடும்ப அட்டைதாரர்களில் ஏற்கெனவே வங்கிக் கணக்கு எண் வைத்திருப்பவர்களை சந்தித்து, அவர்கள் வைத்துள்ள வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி அறிவுரை வழங்கினால் மட்டுமே போதுமானது. அவர்கள் குறித்து வேறு எந்த தகவல்களையும்
பெற வேண்டியது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.