டெல்லி: கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு புதிய தொலைதொடர்பு சட்டம் 2023ஐ அமல்படுத்தியது. இந்த சட்டதிருத்தத்தின் படி, தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு விதிகள் அமலுக்கு வந்தன. அதில் குறிப்பாக பயனாளர் ஒருவர் அவரது அடையாளத்தை கொண்டு 9 சிம்கார்டுகள் மட்டுமே வாங்கி கொள்ள முடியம். எத்தனை சிம் கார்டுகள் வாங்கலாம்.? அதனை மீறினால் அபராதம் , அதன் மூலம் குற்றம் நிகழ்ந்தால் சிறை தண்டனை என கடுமையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு […]
பிறப்பு சான்றாக (DoB) ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, அனைத்து சேவைகளுக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. பணியில் சேர்வதில் தொடங்கி வங்கிகளில் கணக்கு தொடங்குவது, பிஎப், இபிஎப்ஓ கணக்குகள் என அனைத்திலும் ஆதார் தவிர்க்கமுடியாத ஆவணமாக உள்ளது. இதுபோன்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார், பிறப்புச் சான்று […]
வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் அறிவுறுத்தி இருந்தது. தற்போது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மண்டல பதிவாளர்களுக்கு, கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஏற்கெனவே வங்கிக் கணக்கு எண் வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்து உத்தரவிடப்படுகிறது. 14,86,582 […]
தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி பேரின் வாக்காளர் அடையாள எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. – தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதாப் சாகு. இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இரட்டை வாக்குரிமை, இறந்துபோனவர்களுக்கு வாக்குரிமை என பல்வேறு குளறுபடிகளை தீர்க்க இந்த இணைப்பு உபயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு விவரம் குறித்து […]
வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆகையால், வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும் என்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு தரப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் […]
இம்மாதம் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும். ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவுறுத்திய நிலையில், தற்போதும் அதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரையில் நடைபெறும் எனவும் மின்சாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் […]
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் செலுத்தும் நாளிலிருந்து 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நுகர்வோருக்கு நவ.28-ம் தேதி மின் கட்டணம்செலுத்துவதற்கான இறுதி நாள் என்றால், அவருக்கு நவ.30 வரை அவகாசம் வழங்க வேண்டும். அதேநேரம், ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு […]
சரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என உபயோகிப்பாளர் கணக்குகளை சரிபார்க்க மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. – அமைச்சர் செந்தில் பாலாஜி. மழைக்காலத்தில் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் சென்னையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மீட்டர் வரையில் மட்டுமே மின்சாரத்துறை பொறுப்பு. அதற்கு பிறகு உரிமையாளர்கள் தான் ஜாக்கிரதையாக தங்கள் வீட்டில் மின் சாதனங்களை கட்டமைக்க வேண்டும். என குறிப்பிட்டார். மேலும், சென்னையில் இதுவரை 3000க்கும் […]
ரயில் டிக்கெட் முன்பதிவின் முக்கிய வளர்ச்சியாக,ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ் ஆகிய இரண்டிலும் முன்பதிவு செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கெட்டுகளின் வரம்பை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி,இனி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ்(செயலி) ஆகியவற்றின் மூலமாக ஆதாரை இணைக்காமல் ஒரு பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும்,மாறாக ஆதார் இணைக்கப்பட்ட நிலையில்,ஒரு பயனாளர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் […]
ஆதார் அட்டை நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஹோட்டல்கள்,திரையரங்குகள் உள்ளிட்ட எந்தவொரு உரிமம் பெறாத தனியார் நிறுவனத்துடனும் ஆதார் அட்டை நகலைப் பகிரக்கூடாது என்றும்,அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.இது தொடர்பாக,மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஒரு நபரின் அடையாளத்தை நிறுவ ஆதாரை பயன்படுத்த முடியும்.மாறாக, ஹோட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் […]
வருகின்ற மே 26 முதல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ,நிரந்தரக் கணக்கு எண் (பான்) அல்லது அல்லது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது. பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கில்,மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) வருமான வரி விதிகளில் இத்தகைய […]
உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுவாக சிறிய வயதில் உயிரிழந்தவர்கள், மூளை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், விபத்தில் உயிரிழந்தவர்கள் போன்றவர்களின் உடலுறுப்புகள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க தானம் செய்யப்படுவதுண்டு. இதற்கு, சில கட்டுப்பாடும் இருந்தாலும், தற்போது அத்தமிழக அரசு ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் […]
எந்த ஆவணமும் இல்லாமல் இலவச பான் கார்டு பெறும் வழிமுறைகள். இன்று, PAN அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். PAN அட்டை 10 இலக்க ஆல்ஃபாநியூமெரிக் PAN எண்ணுடன் வரும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். இந்த பான் கார்டு, பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் அன்றாட வாழ்வில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். சமீபத்தில், மத்திய அரசு இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைப்பதை கட்டாயமாக்கியது. அந்த வகையில், […]
திண்டுக்கலில் மதுக்கடையில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருவோருக்கு மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும், சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் உடுமலை, மடத்தக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள […]