நியாயவிலை கடைகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறையை அமல்படுத்த அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது, ஜனவரி 1 முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாநில அரசின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 20 கிலோ அரிசி வழங்கினால், அதில் மத்திய அரசு வழங்கும் 15 […]
ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தேர்தல் தொடர்பாக, கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் அறிவுறுத்தி இருந்தது. தற்போது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மண்டல பதிவாளர்களுக்கு, கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஏற்கெனவே வங்கிக் கணக்கு எண் வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்து உத்தரவிடப்படுகிறது. 14,86,582 […]
ரேஷன் பொருட்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – கூட்டுறவுத்துறை எச்சரிக்கை. தற்போது, தமிழக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் என்னென்ன ரேஷன் பொருட்கள் வாங்குகிறார்களோ அதற்கான விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக குடும்ப தலைவர் செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். ஆனால், ஒரு சில குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக குறுஞ்செய்தி செல்கிறது என அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இனி அவ்வாறு புகார்கள் வந்து நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் […]
ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. பல காலமாக உள்ளது என ராதாகிருஷ்ணன் பேட்டி. கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் அவர்கள், கோவையில் நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. பல காலமாக உள்ளது. பறிமுதல் செய்யப்படும் அடிப்படையில் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் இதுவரை 8,44,082 விவசாயிகளுக்கு ரூ.8341.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அறிக்கை. கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் 2023 பொங்கலுக்கு முன்பாக நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டி 2021-2022ஆம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,202.02 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 8,44,082 […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு. கடந்த சில நாட்களுக்கு முன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு. நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நியாய விலைக்கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக வைக்க வேண்டும் என்றும், கிடங்குகளில் அரிசி தரமாக உள்ளதா என ஆய்வு செய்து, ரேசன்கடைகளுக்கு அரிசி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவானது கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான,நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, […]
டந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி. திண்டுக்கல்லில் கூட்டுறவு துறை சார்பாக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் ஒருவருட ஆட்சியில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று நகைக்கடன் தள்ளுபடி,பயிர்க்கடன், பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி திட்டம். தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக,நகைக்கடன் தள்ளுபடி,பயிர்க்கடன்,பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.மேலும்,இன்றைய தினத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் […]
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற சட்டமன்றத்தில் சட்டப் பேரவை விதி எண் 110 கீழ் நகை கடன் தள்ளுபடி அறிவித்தார். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என […]
பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை. இது குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருவதால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை […]
ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் போலி நகைகள் வைத்து ரூ.2.39 கோடி அளவில் கடன் பெற்று மோசடி என கூட்டுறவுத்துறை தகவல். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் 77 நபர்களுக்கு போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வாங்கி பணியாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்காலிக நீக்கம் செய்து கூட்டுறவுத்துறை […]
ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ரூ.763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில், 2021-22 ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பயிர்க்கடன் வழங்க ரூ.11,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ரூ.763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில், மக்கள் எளிதில் சென்று வரமுடியாத […]