சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்..!

Default Image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் வழங்கியது புதுக்கோட்டை  மகிளா நீதிமன்றம்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த ராஜ்குமார் (34) கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர், 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனால், கருவுற்ற சிறுமியை கருவை கலைக்க மருத்துவமனைக்கும் அழைத்துசென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் கடந்த 2020 ஆண்டு கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், அரசு தரப்பில் சிறுமிக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்