#Breaking:21 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

leave has been declared for schools and colleges in 21 districts today due to heavy rains.

கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம்  கடலூர்,வேலூர்,கள்ளக்குறிச்சி,சேலம்,ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 21 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.