கோடநாடு வழக்கு – கோவையில் தனிப்படை போலீசார் விசாரணை!

Private police led by Inspector Velmurugan are conducting an investigation in Coimbatore

காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கோவையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உறவினர்களிடம் கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை பந்தய சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கை விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.