திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த […]
சென்னை : மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மூடநம்பிக்கையை விதைக்கும் வகையிலும், மாற்று திறனாளிகளை காய படுத்தும் வகையிலும் சொற்பொழிவு ஏற்றிருந்தார். இவர் பேசும் போதே இது மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை தீவிரம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய காரின் உரிமையாளர்கள் உட்பட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காரின் உரிமையாளர் நவசாத், புரோக்கர் நவ்ஃபல் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை […]
காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கோவையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உறவினர்களிடம் கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை பந்தய சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கை விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.