என்.ஐ.ஏ சோதனை.! கேரளாவில் கடையடைப்பு.. கல்வீச்சு.! தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்.!

நாடுமுழுவதும் என்.ஐ.ஏ அமைப்பினர் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா அமைப்பினர் நடத்தும் கடையடைப்பு போராட்டத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால், தமிழக பேருந்துகள் கேரளாவுக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ நேற்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதன் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் அதிமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் அந்ததந்த அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். Pபோராட்டம் நடத்தியவர்களை போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் .
இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேரள முழுவதும், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த முழு அடைப்பு போராட்டத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் களியக்காவிளை எல்லையில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் எங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024