கரூர் தவெக மா.செ..கைது.., "அவருக்கு எதாவது ஆச்சுன்னா" – மதியழகனின் மனைவி பரபரப்பு.!

கரூரில் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.

matiyazhagan wife

சென்னை :தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன் தொடர்புடைய வழக்கில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் ஐந்தாவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ம் தேதி நடந்து தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவர் மீது, வழக்கு பதிவு செய்வதற்கு முன் தலைமறைவான மதியழகன், செல்போனை அணைத்து வைத்திருந்தார். கரூர் போலீஸ் தனிப்படை அவரை தேடி கைது செய்தது.  கைது செய்யப்பட்டபின் கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, எஸ்.பி. ஜோஸ் தங்கையா விசாரணை நடத்தினார்

பின்னர், இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை கைது செய்ததற்கான எந்த வீடியோ ஆதாரமும் இல்லாத நிலையில், அவர் மீது சிறு கீறல் ஏற்பட்டாலும் போலீஸே பொறுப்பு என்று அவரது மனைவி ராணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும், அஜித்குமார் லாக்கப் மரணம் போல் ஆகிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

கரூரில் பரப்புரையை காணச் சென்றபோது, விஜய் வந்ததும் திடீரென ஏற்பட்ட நெரிசலால் தான் அருகிலுள்ள குழியில் விழுந்ததாக கூறியுள்ளார். அப்போது சிலர் குடித்துவிட்டு தனது நெஞ்சில் மிதித்ததாகவும், அநாகரிகமாக தன்னை தொட முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது 2 மகன்களின் உதவியுடன் எழுந்து, அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பேட்டியில் கூறியுள்ளார்.