#JustNow: ஆக.15-ல் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு!
சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஸ் அகமது உத்தரவிட்டுள்ளார். கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்ப்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினத்தன்று நடத்த வேண்டும்.
கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தியும், உறுப்பினர்களின் வருகை இருப்பதாய் உறுதி செய்தும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார். செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், கிராம சபை கூட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.