ஜவாத் புயல்: 7 முக்கிய ரயில் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு ..!

Default Image

ஜவாத் புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் – ஹவுரா அதிவேக விரைவு ரயில் ( 12840) இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்  – ஜசிதிஹ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் ( 12375), ஹவுரா- சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் ( 12339), விழுப்புரம் – புருலியா வாரம் இருமுறை விரைவு ரயில் (22606)  ஆகிய ரயில்களின் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை சென்ட்ரல்-ஹவுரா கொரமண்டல் விரைவு ரயில் (12842) , புரி – சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (22859) நாளை ரத்து செய்யப்படுகிறது. ஜாவத் புயல் நாளை ஒடிசாவின் பூரி கடற்கரை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்