கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு – முதல்வர் ஆலோசனை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை.
ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையாளர் இன்றி நடத்தலாமா என முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பை ரத்து செய்து ஆன்லைன் வகுப்பை தொடர்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் 10-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதனை கடுமையாக்கவும்ம், கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)
வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!
February 8, 2025![ByeElection](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ByeElection.webp)
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)