போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது..!
பழைய டென்ஷன் திட்டம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தை முற்றுகையிட முயன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்தனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.!
ஜனவரி 7ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 15 ஆம் தேதி மாவட்ட அளவில் ஒரு நாள் ஆயத்த போராட்டம் நடத்தவும், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.