வாழைப்பழ காமெடி போல அதுதான் இது என்று கூறுகிறார் – மு.க.ஸ்டாலின்

Senthil - DMK leader Mukha Stalin has said that Chief Minister Palanisamy says that this is like the banana comedy of kavuntamani.

செந்தில் – கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி போல அதுதான் இது என்று கூறுகிறார் முதல்வர் பழனிசாமி என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில், அம்மா மினி கிளினிக் தமிழகம் முழுவதும் டிசம்பர் 31-க்குள் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, சேலம் போன்ற மாவட்டங்களில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் திறந்து வைத்தார். ஆரம்ப சுகாதார நிலையில் இருக்கும் மருந்துகள் அனைத்தும் அம்மா கிளினிக்கில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின், அம்மா மினி கிளினிக்குகளுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை முதல்வர் பழனிசாமி அனுப்பிவிட்டு செந்தில் – கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி போல அதுதான் இது என்று கூறுகிறார் என்று முதல்வரை விமர்சித்துள்ளார்.