சென்னை :தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக தூத்துக்குடியில் Kaynes Circuit india நிறுவனம் ரூ.4,995 கோடி முதலீடு செய்கிறது. மேலும், டெல்லியை சேர்ந்த மோபியஸ் எனர்ஜி நிறுவனம் ரூ.1,500 கோடியில் ஆலையை அமைக்கிது. இதில், Kaynes Circuit india என்கிற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான கெய்ன்ஸ் டெக்னாலஜி தனது தொழில் சாலையை தூத்துக்குடியில் அமைக்க முன் வந்துள்ளது.
இந்த நிறுவனம் ரூ.4,995 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி வசதியை தூத்துக்குடியில் அமைக்கிறது. இதனால், தென் தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு மைல்கல் தருணம் ஆகும். மேலும் இந்த பகுதியில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும், ரூ.2,530 கோடி மதிப்பிலான ஐந்து தொழில்துறை திட்டங்கள் தொடங்கப்பட்டன, இவை 3,600 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும். இந்த மாநாடு தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்தது.
இதன்பின், தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம் கலைஞரின் கனவு நனவாகிறது. மதுரையில் டைடல் பார்க், தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க், விருதுநகரில் PM மித்ரா பார்க், நெல்லையில் டாடா எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
