#Breaking:சற்று முன்…பிரபல MGM குழுமம் இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு!
பிரபல தீம் பார்க் நடத்தி வரும் நிறுவனமான MGM குழுமம் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.வரி ஏய்ப்பு புகார் காரணமாக சென்னை, பெங்களூரு,நெல்லை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சற்று முன்னர் முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக,MGM தொடர்புடைய நட்சத்திரவிடுதி,கேளிக்கை பூங்கா,அலுவலகம் மற்றும் ஊழியர்களின் இல்லங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சோதனைக்கு பின்னர் முறையான விவரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.