AIADMK : கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வரும் நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இறங்கியுள்ளது என கூறப்படுகிறது. Read More – தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு […]
சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில் கரூர் புறவழிச்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பங்களா கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! அசோக்குமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் […]
ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடந்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று சோதனை நடந்த ஷாஜஹான் ஷேக் இல்லத்தை நெருங்கியபோது அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதமேந்திய துணை ராணுவப் படையினரை சுற்றி வளைத்தனர். அதிகாரிகளை ஷேக்கின் ஆதரவாளர்கள் தாக்கியதால் சோதனை […]
விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது, நீதிமன்றங்களில் வாதிட தேவை இருக்காது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருப்பதால், அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவ் தான் வெற்றி […]
திருச்சி மாநகராட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் இல்லத்தில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் MP என்ற தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பணமோசடி புகாரின் அடிப்படையில் திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும்,தமிழகம் முழுவதும் மொத்தமாக 50 இடங்களிலும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தனியார் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், நிறுவனத்தின் பூட்டை […]
திருவாரூர்:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட மொத்தம் 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த பல்வேறு புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் முன்னதாக சோதனை நடத்தியபோது அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது.அந்த வகையில்,கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் நண்பரான சந்திரசேகர் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழலில்,கோவை வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.ஏற்கனவே இரண்டு முறை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில்,நேற்று 3-வது முறையாக சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் 10 […]
பிரபல தீம் பார்க் நடத்தி வரும் நிறுவனமான MGM குழுமம் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.வரி ஏய்ப்பு புகார் காரணமாக சென்னை, பெங்களூரு,நெல்லை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சற்று முன்னர் முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக,MGM தொடர்புடைய நட்சத்திரவிடுதி,கேளிக்கை பூங்கா,அலுவலகம் மற்றும் ஊழியர்களின் இல்லங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சோதனைக்கு பின்னர் முறையான […]
பீகார் மாநில முன்னாள் முதல்வரும்,ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய டெல்லி மற்றும் பீகார் உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே,139 கோடி டொராண்டா கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது. இதனைத் தொடர்ந்து,கால்நடைத் தீவன […]
கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.தான் ஆட்சியில் இருந்தபோது டெண்டர்களை முறைகேடாக தனக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி வேலுமணி மற்றும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில்,வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்தை விட 3,928% கூடுதலாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி,தான் பதவி வகித்த காலங்களில் முறைகேடாக நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கிய புகாரின் அடைப்படையில் அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது சகோதரர் வீடு, அவருக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்கள் என மொத்தம் 60 இடங்களில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை […]
ராணிப்பேட்டை:திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏவி சாரதி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.வி.சாரதியின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.முன்னதாக,அதிமுகவில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த சாரதி கடந்த ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்நிலையில்,அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். […]
வருமானத்தை விட கூடுதலாக ரூ. 11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு. அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய வீடு உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக,2016- 2021 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டதாகவும்,சென்னை உயர்நீதிமன்றம் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டதாகவும்,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில்,வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு நடப்பது புதிதல்ல என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம், வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பால பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஏ.வ வேலு, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு நடப்பது புதிதல்ல […]
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. மேலும், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதியில் 69க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே எம்.ஆர் […]
சென்னை:சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை. சென்னை புரசைவாக்கம் தி.நகரில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே,கடந்த 2019 ஆம் ஆண்டு சரவணா ஸ்டோரின் வேறு ஒரு குழுமத்திற்கு சொந்தமான […]
காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடையில் ஐடி துறையினர் சோதனை. காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பச்சையைப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும்,செங்கல்வராயன் சில்க்ஸ்,எஸ்.கே.பி. நிதி நிறுவனம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் போலீசார் பல ரவுடிகளை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக பல பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினர்.மேலும்,நள்ளிரவில் ரவுடிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ரவுடிகளின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.துணை ஆணையர் ராஜேஸ் கண்ணா தலைமையில் நடந்த இந்த சோதனையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பல […]
முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது குறித்து எந்தவொரு ரெய்டுக்கும்,பயப்படாத இயக்கம் அதிமுக என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாகக் எழுந்த புகாரின் பேரில் இன்று காலை 6.30 மணி முதல் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில்,இந்த […]