சென்னை :நேற்று உடல் நலக்குறைவால் சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு அவரது உடல்நலம் சீராக உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் இருந்து அறிக்கை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் பதிவு
இந்நிலையில், ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த பல்வேறு அரிசியல் தலைவர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
Read More-நடிகர் ரஜினிகாந்த் குணமடைய அரசியல் தலைவர்களின் எக்ஸ் தள பதிவுகள்.!
குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஆளுநர் ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கூறியிருந்தார்கள்.
தவெக தலைவர் விஜய்
அவர்களை தொடர்ந்து நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்” எனக்கூறியுள்ளார்.
unknown node