ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன் – கமல்ஹாசன் ட்வீட்

Kamal Haasan condemns the mysterious death of 4 Tamil fishermen in a collision with a Sri Lankan naval vessel.

இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு கமல்ஹாசன் கண்டனம்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு சென்றபோது, இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இலங்கை கடற்படையால் தான் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று அவர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

unknown node