தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை , நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இரண்டு படகுகளுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகம் அழைத்து சென்றுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் […]
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகத்தீவிரமாக உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் தீராத பிரச்சனை என்றால் மீனவர்கள் பிரச்சனை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். ஏனென்றால், தமிழக மீனவர்களை கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், மீனவர்களின் படகுகள், வலைகளையும் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு […]
அந்தமானுக்கு அருகே உருவாகியுள்ள காற்றுழத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை. ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மீன்வளத்துறை அறிவிப்பை அடுத்து தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு […]
வெளியுறவு இணை அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என சு.வெங்கடேசன் எம்பி பதிவு. இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் […]
தமிழக மீனவர்களை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கைகோரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள், […]
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் […]
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம்,மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. மொத்தம் 16 பேர்: அதைபோல்,தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.குறிப்பாக,எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி […]
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேர் மற்றும் வடமாநில மீனவர்கள் 6 பேர் என மொத்தம் 25 மீனவர்களை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. மேலும்,கன்னியாக்குமரியின் தூத்தூர்,பூத்துறையை சேர்ந்த நாயகம்,அந்தோணி என்பவர்களது இரண்டு படகுகளையும் செஷல்ஸ் நாட்டு கடற்படை பறிமுதல் செய்துள்ளது.இதுவரை செஷல்ஸ் நாட்டு கடற்படையால் 5 விசைப்படகுகளுடன் 33 தமிழகம் மற்றும் 25 வடமாநில மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம்,செஷல்ஸ் நாட்டு கடற்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 33 […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சதீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை,காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.கைதான 13 காரைக்கால் மற்றும் 9 நாகை மீனவர்களிடம் மயிலிட்டி துறைமுகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அடிக்கடி இலங்கை கடற்படையால் தமிழக […]
ராமநாதபுரம்:தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றதை கண்டித்து மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,அவர்கள் டிச.31-ஆம் தேதி […]
இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு கமல்ஹாசன் கண்டனம். ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு சென்றபோது, இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இலங்கை கடற்படையால் தான் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று அவர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக மீனவர்கள் 4 பேர் மர்மமான முறையில் […]
இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் உயிரிழந்ததாக கூறப்படும் 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை. கடந்த 18-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இலங்கை கடற்படையால் தான் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று அவர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆகவே, உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை இந்தியாவில் தான் நடக்க […]
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற போது, காணாமல் போன 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 18-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையப்பட்டினத்தில் இருந்து ஒரே படகில் சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பாத பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது, காணாமல்போன நான்கு மீனவர்களும் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று செந்தில்குமார், சாம்சன் ஆகிய இரண்டு பேரின் உடலை மீட்ட நிலையில், தற்போது மெசியா, நாகராஜ் ஆகிய […]
சிங்கள இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் வலிறுத்தியுள்ளார். இந்நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அந்த வகையில், இது தொடர்பாக சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 121 படகுகளை […]
ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரானில் சிக்கியுள்ள 300 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது .வெளியுறவுத்துறை மூலம் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா […]