சென்னை :திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை (ED) பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்ததற்காக சென்னை உயர்நீதிமன்றம் 30,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்திருந்தது, ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சம்மன் அனுப்பியதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரனும், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனும் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறைக்கு இரண்டு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
பதில் மனு இன்னும் தயாராகவில்லை என்பதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தனர்.
ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கிய பின்னரும் ஏன் இன்னும் பதில் மனுத்தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததோடு, நீதிமன்றம் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை ஏற்க முடியாது எனவும், ஆகாஷ் பாஸ்கரன் தரப்பு விரும்பினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் தெரிவித்தது.
