சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைகள் சுமார் 44 மணி நேரம் நடந்ததாக சொல்லப்படுகிறது. சோதனையின் போது, கல்லூரியின் அலுவலக ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்லூரியில் பணம் வைக்கும் அறையில், பணம் இருந்ததை கண்டறிந்து, வங்கி ஊழியர்கள் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலில் அமலாக்கத்துறையினர் கைது செய்து இருந்தனர். அடுத்ததாக இதே வழக்கில் சிபிஐ விசாரணை குழுவினரும் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில், கெஜ்ரிவாலுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் கைதாகி இருந்ததால் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல், சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் சட்டவிதிகள் […]
அரவிந்த் கெஜ்ரிவால் : மதுமான கொள்கை வழக்கு தொடர்பாக, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றம் விசாரணையை எடுத்துக்கொண்டது. கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ இந்த வழக்கில் அவரை முறைப்படி கைது செய்தது. இது தொடர்பான வழக்கில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கு எதிராக அமலாக்க துறையினார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை டெல்லி […]
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் நடைபெற்றதாக கூறி, கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யபட்டார். கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வந்தநிலையில், மக்களவை தேர்தலை […]
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இதுவரை 3 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதியன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல் மற்றும் தெலுங்கானாவில் மக்களவை தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (புதன் கிழமை) தெலுங்கானா […]
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் , ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது வரை அவர் டெல்லி திகார் சிறையில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான […]
Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கே.கவிதா ஆகியோர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்.26ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதேசமயம் […]
Drug Case: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில், ஜாபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜாபர் சாதிக் உடனான தொடர்பின் அடிப்படையில் சென்னை தியாகராய நகர் பாண்டிபசாரில் உள்ள இயக்குனர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]
Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ். கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இதற்கான நகலும் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல்வேறு முறை செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும், […]
Arvind Kejriwal : டெல்லி சிறையில் இருந்து கொண்டே மாநில முதல்வராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கதுறை விசாரணையில் இருந்தாலும் முதல்வராக தனது பதவியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். […]
Arvind Kejriwal : டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நேற்று அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய நபராக அரவிந்த் […]
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் நேற்று டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக காரணத்தால் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி பின்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அமலாக்கத்துறை […]
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுவரை 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு! மேலும், அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து […]
Ankit Tiwari : திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரை மிரட்டி அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. Read More – 5000 ரூபாய் பணம்.? 2 சிறுவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்த கொடூரன்.! இந்த வழக்கில் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து […]
Senthil Balaji – கடந்த வருடம் ஜூன் மாதம் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாகத்துறையின் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையானது, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து, இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக பதியப்பட்டு உள்ளது. அதனால் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று […]
கடந்த 2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரையில் புழல் சிறையில் அமலாக்கதுறை விசாரணையில் இருக்கிறார். 15ஆவது ஊதிய ஒப்பந்தம்.. குழு அமைத்த தமிழக அரசு..! கடந்த 2023 மே மாதம் முதலே வருமானவரித்துறையினர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் செந்தில் பாலாஜிக்கு […]
டெல்லியில் அமல்படுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், இதுவரையில், டெல்லி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் . ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்! இதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்கவும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து அவருக்கு சம்மன் அனுப்பி வருகின்றனர். […]
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேற்று முன்தினம் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதுக்கு முன்பே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ஹேமந்த் சோரன். இதனால் ஜார்க்கண்ட் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் […]
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இறுதியில் […]