தமிழகத்தில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Fishermen have been advised not to venture into Kerala and Lakshadweep waters as heavy rains will continue in Tamil Nadu for the next three days.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், கேரளா மற்றும் லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்றே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 3 நாட்களுக்கு கேரளக் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.