திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் 2 டன்னுக்கு மேல் குட்கா பொருட்கள் சிக்கியுள்ளன.
unknown nodeதாடிக்கொம்பை அடுத்த கிரியம்பட்டி கிராமத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெரியசாமி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
unknown nodeஅப்போது அவரது வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட அறைகளில் 2 டன்னுக்கு மேல் பான்பராக, குட்கா உள்ளிட்ட 5 வகையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தலைமறைவான பெரியசாமி அவரது மனைவி நாகம்மாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
DINASUVADU