திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில் விசிக தாக்கம், மற்ற மாநிலங்களில் விசிக கட்சியின் வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ” நாம் அரசியலில் அடியெடுத்து வைத்த போதே நாம் கூறியது, ‘ எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பது அளிக்கப்பட வேண்டும்’ என்பது தான் நாம் வைத்த முதல் முழக்கம். அந்த இலக்கை உடனடியாக […]
திண்டுக்கல்: தமிழக அறநிலையத்துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள, முருகரை பற்றி ஆய்வு கட்டுரைகள் எழுதி அனுப்ப muthamizhmuruganmaanadu2024.com எனும் இணையதளத்தில் பதிவு செய்ய முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், முருகன் மாநாடு பற்றியும், அதற்கான முன்னேற்பாடுகள், ஆய்வு கட்டுரைகள், விருதுகள் பற்றியும் அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் செய்தியாளர்கள் […]
E Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் மே 7ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்து வர வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதாலும் மலை பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழலை பாதுகாக்க பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]
கொடைக்கானலில் வருடந்தோறும் நடைபெற்று வந்த கோடை விழாவானது இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நாளை மறு நாள் மே 3ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு,தளர்வு பற்றி இன்னும் அரசு அறிவிக்கவில்லை. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தடைபட்டுள்ளன. தமிழகத்தில், பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெற இருந்த பல்வேறு விழாக்கள் […]
உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் 5 ஆயிரத்து 700-ஐ தாண்டிவிட்டது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இதனால், மாவட்டந்தோறும் ஊரடங்கு காவல்துறையினரால் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கின் போது வெளியில் வருபவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், எமலோகத்தில் இடம் நிரம்பிவிட்டது. இதற்கு […]
திண்டுக்கல் மாவட்டத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் இக்கோவிலில் மாசிதிருவிழா வெகுச்சிறப்பாக நடைபெறும் அவ்வாறு நடப்பாண்டிற்கான மாசித்திருவிழா கடந்த மாதம் 20ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கி கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், ஊஞ்சல் உற்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அம்மனின் தெப்ப உற்சவம் நடந்தது. இதனால் காலை 10.30 மணியளவில் அன்னைக்கு பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் உள்ளம் குளிரும் படியாக மகா […]
ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத நிலையில் ஏ.டி.எம்மை உதைத்து ,கல்லை தூக்கி வீசி உடைத்த சம்பவக் காட்சிகள் அனைத்தும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டி உடைத்தவர் சேவுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி தெரியவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் பணம் வராத நிலையில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி ஒங்கி ஒரு உதை […]
உலகளவில் இன்று(அக்.16) உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பிரியாணி கடையில் அற்புதமான அறிவிப்பை அறிவித்தனர். அதாவுது “செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு வரும் முதல் 100 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என அறிவித்தனர். இந்த சேவை மதியம் 12 மணியளவில் தொடங்கும் என்றபோதிலும் காலை 10 மணியளவிலே கடைக்கு முன் கூட்டம் அலை மோதியது. இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறுகையில், பழமையை புதுமையாக மாற்ற […]
புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் விளையும், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது போல் ஆகும். அதாவது, பழனி பஞ்சாமிர்தம், சேலத்து மாம்பழம் போல அந்தந்த பகுதிகளில் சிறப்பாக விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்படும். இதன்மூலம் வேறு பகுதிகளில் இந்த பொருட்களை போலியாக தயாரித்து விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலை பூண்டு, ஈரோடு மஞ்சள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு […]
கொடைக்கானல் அண்ணா நகரில் பகுதியை சேர்ந்த சசி என்பவர் அதே பகுதியில் தனியார் கடையில் வேலை செய்து வரும் ரோஜா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கு இடையில் பண பரிவர்த்தனை அடிக்கடி நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சசியிடம் கொடுத்த கடன் அதிகமானதால் ரோஜா அவரிடம் அடிக்கடி கேட்ட பிறகு, திண்டுக்கல் வத்தலகுண்டிற்கு வருமாறும் அங்கு வந்து பணத்தை பெருகொள்ளுமாறும் கூறியுள்ளன். இதனை நம்பி அங்கு சென்றுள்ள ரோஜாவை தனியார் விடுதிக்கு அழைத்து சென்று அவரை பாலியல் […]
கடும் பனிப்பொழிவால் திண்டுக்கல்லில் கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதித்துள்ளது. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் அடங்கிய கொய்யாப்பழத்தில் பாதுகாக்க எவ்வளவு மருந்து அடித்தாலும் பலன் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இதனால், பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற […]
தமிழக அரசால் சுற்றுலா தலமென்று அறிவிக்கபட்ட வேடச்சந்தூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அடுத்த மாரம்பாடியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த புனித அந்தோனியர் ஆலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தில், உலக அமைதி வேண்டி அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தபட்டன. பின்னர் சபை மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.
அரசுப் பேருந்தின் அவலநிலையை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான இருப்பவர் விஜயகுமார்.பழனி – திருச்சி பேருந்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பேருந்து முழுவதும் ஒழுகியது, பிரேக், முகப்பு விளக்கு ஆகியவை சரிவர செயல்படவில்லை என்றும் இதனால் பேருந்தை இயக்க முடியவில்லை என ஒடுநர் விஜயகுமார் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து கிளை மேலாளரிடம் […]
மதுரை, சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததுள்ளது இதனால் மக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் மதுரையில் நேற்று இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. 2 மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் உட்பட […]
4 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி 7 வது வார்டுக்குட்பட்ட நாயக்கர் தெரு இந்த தெரிவில் அமைந்துள்ள கோவிந்தாபுரம், பள்ளிவாசல் தெரு, ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை. இந்நிலையில் அத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து பெரியார் சிலை அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.4 மாதங்களாக குடிக்க தண்ணீரின்றி […]
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் 2 டன்னுக்கு மேல் குட்கா பொருட்கள் சிக்கியுள்ளன. தாடிக்கொம்பை அடுத்த கிரியம்பட்டி கிராமத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெரியசாமி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட அறைகளில் 2 டன்னுக்கு மேல் பான்பராக, குட்கா உள்ளிட்ட 5 வகையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது […]
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரை தொண்டர் ஒருவர் கலாய்த்தார். அது பற்றிய விவரம் வருமாறு திண்டுக்கல் ஒன்றியப் பகுதி மாலைபட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலகிருshஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 1.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முதல்வர் சட்டமன்றத்தில் […]
விடுதலைசிறுத்தை கட்சியினர் வினோதமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பிரதான சாலையை சீரமைக்ககோரி விடுதலைசிறுத்தை கட்சி வினோதமாக பேரூராட்சி அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையை சீரமைத்து தர அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர். DINASUVADU
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை கண்டித்து திண்டுக்கல்லில் இந்து முன்னணியினர் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். மேலும் அவர்கள் விநாயகர் சிலையை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றையும் அளித்தனர். DINASUVADU