ஆளுநர் தேநீர் விருந்து – அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக பங்கேற்பு.!

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில், தமிழக அரசு சார்பில் தலைமை செயலர் முருகானந்தம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் பங்கேற்றனர்.

tea party - Independence Day

சென்னை :தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டி ராஜ் பவனில் சுதந்திர தினத்தையொட்டி தேநீர் விருந்து ஏற்பாடு செய்தார். இதில் ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, தற்பொழுது ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடந்து வருகிறது.  இதில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் பங்கேற்றனர். மேலும், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் அழைப்பை ஏற்று பங்கேற்றுள்ளனர்.

அதன்படி, பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா வருகை தந்துள்ளனர். அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை வருகை அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இது போக,

இருப்பினும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணிக் கட்சிகளான திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), மதிமுக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகியவை இந்த விருந்தை புறக்கணித்தன.

இந்தப் புறக்கணிப்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், குறிப்பாக தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது, பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனத்தில் தாமதம் போன்றவற்றுக்கு எதிராகவும் அமைந்தது.