இதை செய்தால் குண்டாஸ் பாயும்.! தமிழக அரசு அதிரடி.!

முகக்கவசம் ,சனிடரைசர் அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிரடி . கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சானிடைசர் முக்கிய அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.இதனை பயன்படுத்திக்கொண்டு சில விஷமிகள் அதிக விலைக்கு விற்பதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தது.
இதனை கருத்தில் கொண்டு முகக்கவசம் மற்றும் சானிடைசர் அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.நாம் அனைவரும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம்.
இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் இருக்க வேண்டும் . இதனை கருத்தில் கொண்டு அனைவரும் நடக்க வேண்டும் என்று தினச்சுவடு மூலமாக கேட்டுக்கொள்கிறோம் .
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025