கொரோனா ஊரடங்கில் மேலும் கூடுதல் தளர்வுகள் – தமிழக அரசு

Permission has been granted to hold political, religious and cultural entertainment meetings in the open air from December 19.

டிசம்பர் 19-ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்தது. அதன்படி, சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை போன்றவைகள் நேற்று முன்தினம் முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இதுவரை திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அதேசமயம் அரங்குகளில் அரசியல், மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளித்து, முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், டிசம்பர் 19-ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம்சார்ந்த  கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றி 50% பங்கேற்பாளர்களுடன் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம். அதேசமயம் மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர காவல் ஆணையரிடமும் அனுமதி பெறுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

unknown node